'ஸ்கோரே கேவலமா இருக்கு'...தப்பா 'அவுட்' கொடுத்துட்டாங்க...கதறிய சிறுவன்...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 13, 2019 02:15 PM
நேற்றைய போட்டியின் போது தோனிக்கு தவறாக அவுட் கொடுத்து விட்டதாக கூறி,சிறுவன் ஒருவன் கதறி அழுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 12வது சீஸனின் இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில்,மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.இது சென்னை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.இந்த போட்டியில் தோனியின் ரன் அவுட் சர்ச்சையான ஒன்றாக மாறிவிட்டது.அது குறித்து ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் விவாதித்து வருகிறார்கள்.ரன் எடுப்பதற்காக வாட்சனும்,தோனியும் ஓடி வந்தனர்.அதன் பின்னர் இரண்டாவது ரன் எடுப்பதற்காக தோனி ஓடிய போது மும்பை வீரர் இஷான் கிஷன் நேரடியாக பந்தை ஸ்டெம்பில் அடித்தார்.பந்து ஸ்டெம்பில் அடிக்கும் போது தோனியின் பேட் சரியாக கிரீஸில் இருந்தது.
இது நடுவர்களுக்கு பெரும் சிக்கலாக அமைந்த நிலையில்,பல கோணங்களில் ஆராய்ந்து தோனி அவுட் என மூன்றாவது நடுவர் அறிவித்தார்.இது இணையத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பிய நிலையில்,தோனிக்கு தவறாக அவுட் வழங்கப்பட்டதாக கூறி சிறுவன் ஒருவன் அழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் தனது தாயிடம் 'தோனி அவுட் இல்ல,தப்பா அவுட் கொடுத்துட்டாங்க என முறையிடுகிறான்.அந்த சிறுவனின் தாய் எவ்வளவோ தேற்றியும் அவன் கேட்டபாடில்லை.இந்த வீடியோவை சென்னை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
