‘1 ரன்னில் பறிபோன ஐபிஎல் கோப்பை’.. அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா?.. ‘தல’ யின் அதிரடி பதில்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 13, 2019 01:15 AM

பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

IPL 2019: Will he be there in the next season?Hopefully yes,Says Dhoni

ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று(12.05.2019) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு முக்கிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சென்னை அணி பந்துவீச்சாளருக்கு நெருக்கடியை கொடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ரன்கள் அடித்தார்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது. இதில் அதிகபட்சமாக வாட்சன் 80 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து பேசிய தோனி, எந்த அணி குறைவான தவறுகளை செய்ததோ அந்த அணிதான் வெற்றி பெற்றுள்ளது என கூறினார். மேலும் அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது பற்றிய கேள்விக்கு தோனி நிச்சயம் விளையாடுவேன் என பதிலளித்துள்ளார்.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #WHISTLEPODU #YELLOVE #MIVCSK