'கொரோனா நேரத்துல இது வேறயா'...'திடீர்னு பாறையில் ஊர்ந்த விநோதம்'... கதிகலங்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'கொரோனா நேரத்துல இது வேறயா'...'திடீர்னு பாறையில் ஊர்ந்த விநோதம்'... கதிகலங்க வைக்கும் வீடியோ!

கொரோனா தொற்றினால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கும் நிலையில், பலரும் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து ட்விட்டரில் வைரலான வீடியோ ஒன்று பலரையும் கதிகலங்க செய்துள்ளது.
ட்விட்டரில் வைரலான அந்த வீடியோவில், பாறையில் கருப்பு நிறத்தில் வினோதமாக இருக்கும் உயிரினம் ஒன்று திடீரென ஊர்ந்து செல்கிறது. இது பார்ப்பதற்கு சற்று அதிர்ச்சியாக இருக்கும். உடனே அங்கிருந்த நபர் ஒருவர் அதனை கத்தியால் கீறுகிறார். இருப்பினும் அது எந்த வித எதிர்ப்பும் காட்டாமல், அது தானாக ஊர்ந்தபடி செல்கிறது. 14 நொடிகளே ஓடும் இந்த வீடியோ ட்விட்டரில் செம வைரலானது. இதுவரை அந்த வீடியோ 19.5 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது என்ன உயிரினம் தெரியுமா என கேட்டு பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். பலரும் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது என்ன கமெண்ட் செய்து வருகிறார்கள். வீடியோவை பார்த்த பலரும் இது 'ஸ்பைடர் மேன்' கார்ட்டூன் மற்றும் திரைப்படங்களில் ‘வெனாம்' என்கிற கற்பனை கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறது, என கூறியுள்ளார்கள்.
இதனிடையே வீடியோவில் இருக்கும் உயிரினம் குறித்து 'என்டிடிவி' செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவலில் இது, ''பாட்டில் லேஸ் புழு'' என்றும், கிட்டத்தட்ட 180 அடி வரை இது வளரும் என்றும் சொல்லப்படுகிறது. தன்னைத் தாக்க வருபவர்கள் மீது இந்தப் புழு, ஒரு வித நஞ்சைப் பாய்ச்சும் எனவும் கூறப்படுகிறது.
Anybody know what this is? pic.twitter.com/B2dQLTm4td
— stimulus package (@sunnyarkade) April 2, 2020
