‘இது ஒரு பாடம்’... ‘திடீரென உடைந்த கட்டமைப்பு’... ‘வெறுப்பூட்டும் அனுபவம்’... ‘மீண்டு வந்த இளவரசர் பகிரும் உருக்கமான வீடியோ’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 02, 2020 12:45 PM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளவரசர் சார்லஸ் குணமடைந்த நிலையில் தற்போது உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Britain\'s prince charles fully recovered from COVID-19 new video viral

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி இளவரசரும், அவரின் மனைவியும் ஸ்காட்லாந்தில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள இளவரசர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாட்கள் என் வாழ்வில் முன் எப்போதும் அனுபவிக்காத ஒன்று. சற்றே கடினமாக இருந்தது, ஆனாலும், ஒருவழியாக வைரஸை கடந்து வந்துவிட்டேன். லேசான அறிகுறிகளுடன் அதிர்ஷ்டவசமாக இதிலிருந்து தப்பித்து தற்போது நோயின் மறுபக்கத்தில் புதிய உலகைக் காண்கிறேன். நான் குணமடைந்திருந்தாலும் இன்னும் சில நாள்கள் என்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்.

இந்த வைரஸ் தொற்று அனைவருக்கும் ஒரு பாடம். குடும்பம், நண்பர்கள் என மகிழ்ச்சியுடன் இருந்த இயல்பான நம் கட்டமைப்புகள் திடீரென அகற்றப்படும்போது ஒரு விசித்திரமான வெறுப்பூட்டும் அனுபவமாக இருந்தது. இந்த வைரஸ் தொற்றை எதிர்த்து முன் வரிசையில் நின்று தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிறரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : #CORONAVIRUS #CORONA #TWITTER #PRINCE #CHARLES #VIDEO