‘நீண்ட கால காதலியை கரம் பிடித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்’.. வைரலாகும் திருமணப் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 21, 2019 03:11 PM

இந்திய கிரிக்கெட் விரர் ஹனுமா விஹாரி, ஃபேஷன் டிசைனர் பிரீத்திராஜ் எருவா என்ற பெண்ணை கரம் பிடித்துள்ளார்.

Indian cricketer Hanuma Vihari ties knot with his long time girlfriend

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்த 25 வயதான ஹனுமா விஹாரி இந்திய அணியில் முதல் தர கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடர்களிலும் ஹனுமா விஹாரி விளையாடியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சார்பாக விளையாடினார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலி பிரீத்திராஜ் எருவா என்பவருடன் ஹனுமா விஹாரிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பிரீத்திராஜ் ஃபேஷன் டிசைனராக இருந்து வருகிறார். ஹனுமா விஹாரி தனது திருமணப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘இந்த சிரிப்பு எப்போதும் இருக்க நான் வாக்கு கொடுக்கிறேன். ஐ லவ் யூ. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Tags : #HANUMAVIHARI #MARRIAGE #CRICKET #TEAMINDIA