‘கனவு நிஜமாகியிருக்கு..’ நெகிழ்ந்த ஹர்திக் பாண்ட்யாவின் வைரலாகும் புகைப்படம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 24, 2019 06:53 PM

மே 30-ம் தேதி தொடங்க இருக்கும் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது இந்திய அணி.

hardik pandya from celebrating Indias worldcup triumph to TeamIndia

இந்த முறை ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் எனப் பலர் முதன்முதலாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர். பேட்ஸ்மென்களுக்கு சாதகமான ஆடுகளத்தால் 500 ரன்கள் வரை எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுள்ளது. இதன்காரணமாக பவுலர்களுக்கு காத்திருக்கும் சேலஞ்சால் ரசிகர்களும் போட்டிகளைப் பார்க்க அதிக ஆர்வத்தில் உள்ளனர். 

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தனது டிவிட்டரில் பதிவில், “2011ல் உலகக் கோப்பையை வென்றபோது இந்தியா அணி வெற்றியை ரசிகனாக கொண்டாடியதிலிருந்து இப்போது இந்திய அணிக்காக 2019 உலகக் கோப்பையில் விளையாடுவது வரை, கனவு நிஜமாகியிருக்கிறது” என அவருடைய அப்போதைய புகைப்படத்தையும், இங்கிலாந்தில் இந்திய அணி வீரர்களுடன் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #HARDIKPANDIYA #DREAMCOMETRUE