‘இனி கிரிக்கெட்டில் இந்த தப்பு நடக்க வாய்ப்பே இல்லை’.. ‘அறிமுகமாகும் புதிய பந்து’.. அப்டி என்ன ஸ்பெஷல்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 12, 2019 05:10 PM

கிரிக்கெட் போட்டிகளில் ‘ஸ்மார்ட் பால்’ பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

New microchipped cricket SmartBall could be used in BBL match

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ‘ஸ்மார்ட் பால்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இந்த பந்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் பந்தில் கீழே விழுந்து விடாத அளவில் சிப்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பந்து வீசப்படும் போது பந்தின் வேகம், பந்துவீச்சாளரின் கையைவிட்டு செல்லும் போது பந்தின் வேகம், பேட்ஸ்மேனை நோக்கி செல்லும் போது அதன் வேகம் என துல்லியமாக அறியக்கூடிய வகையில் வடிமைக்கப்பட்டிள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களால் கணிக்க முடியாத விக்கெட்டுக்களை சோதித்துப் பார்க்க டி.ஆர்.எஸ் முறை நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இதில் அவுட் முடிவுகள் துல்லியமாக இருப்பதில்லை என குற்றசாட்டுகள் எழுந்தன. ஆனால் இந்த ஸ்மார்ட் பந்தின் மூலம், பந்து பேட்ஸ்மேனின் காலில் பட்டதா, அல்லது பேட்டை உரசி சென்றதா உள்ளிட்டவற்றை துல்லியமாக அறியமுடியும் எனக் கூறப்படுகிறது. இந்த பந்து முதலில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போட்டியில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டால், அதன்பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags : #SMARTBALL #BBL #CRICKET #MICROCHIPPED #AUSTRALIA