சர்வதேச கிரிக்கெட் இருந்து ஆம்லா ஓய்வு..! திடீர் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 09, 2019 08:54 AM

தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Hashim Amla announces retirement from international cricket

கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் திடீரென சர்வதேச கிரிக்கெட் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஆம்லா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 44 டி20 போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள், 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 18,672 ரன்களை எடுத்துள்ளார். அதில் 55 சதங்களும், 88 அரைசதங்களும் அடித்துள்ளார். இவர் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் 300 ரன்களை கடந்த ஓரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைப் போலவே ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000, 3000 உள்ளிட்ட ரன்களை கடத்து அசத்தியுள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆம்லா, கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு உறுதுணையாக இருந்த தாய்,தந்தை மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

Tags : #HASHIM AMLA #RETIREMENT #CRICKET #SOUTH AFRICA CRICKET