‘எனக்கு புடிச்ச கேம், அது இல்லைனு நெனைக்கும் போது..’.. உருக்கமான பதிவுடன் ஓய்வு பெறும் முன்னாள் சிஎஸ்கே வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 06, 2019 10:43 AM

நியூஸிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Brendon McCullum to retire after Global T20 Canada

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் கடந்த 2016 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் நியூஸிலாந்து அணியின் அடுத்த கேப்டனாக கேன் வில்லியம்சன் பொறுப்பேற்றார்.

இதனை அடுத்து ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் மெக்கல்லம் விளையாடி வந்தார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளின் சார்பாக விளையாடியுள்ளார். தற்போது கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 லீக்கில் டொரண்டோ நேசனல்ஸ் அணியில் விளையாடி வந்தார். இந்நிலையில் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியுடன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மெக்கல்லம் அறிவித்துள்ளார்.

மேலும் ‘எனக்கு பிடித்த விளையாட்டை விட்டுவிட்டு போவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் என்னுடைய வருங்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பதை நினைத்து ஆர்வமாக இருக்கிறேன்’ என மெக்கல்லம் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Tags : #CSK #BRENDON MCCULLUM #RETIREMENT #GLOBAL T20 #CRICKET #CANADA