‘இனிமேல் இந்த தப்பு நடக்கவே நடக்காது’.. மறுபடியும் அந்த விதிமுறையை கொண்டுவரும் ஐசிசி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 07, 2019 10:26 PM
கிரிக்கெட் போட்டிகளில் வீசப்படும் நோ பாலை கண்டுபிடிக்க புதிய விதிமுறையை ஐசிசி கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடங்கி உலகக்கோப்பை போட்டி வரை நோ பால் மூலம் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்தன. போட்டியின் சில முக்கியமான தருணங்களில் அம்பயர்கள் நோ பால் வீசுவதை கவனிக்காமல் விடுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இந்த தவறுகள் நிகழாமல் தடுக்க ஐசிசி புதிய விதி ஒன்றை கொண்டு வரவுள்ளது.
அதில், இனி பந்துவீச்சாளர் வீசும் ஒவ்வொரு பந்தையும் டிவி நடுவர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர் நோ பால் வீசினால் அதனை உடனே மைதானத்தில் உள்ள அம்பயருக்கு இவர் தெரிவிப்பார். இந்த விதிமுறை அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இந்த விதிமுறை முயற்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.