‘இது ஒன்னு போதும் தலைவா’.. ‘மனசுல நின்னுட்டீங்க’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 09, 2019 07:16 PM
இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பைத் தொடருக்கு பின்னர் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகினர். அதற்கு காரணம் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த போதுலும் முகத்தில் எந்தவித பதட்டத்தையோ, கோபத்தையோ வெளிப்படுத்தாமல் அணியை சிறப்பாக வழி நடத்தினார்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியடைந்த பிறகு பவுண்டரி விதியை பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் வில்லியம்சன், இரு அணிகளுமே நன்றாக விளையாடியது. கோப்பை ஒரு அணியிடம் உள்ளது அவ்வளதுதான் என எதார்த்தமாக பதிலளித்தார்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களுடன் தனது 29 -வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். ரசிகர்களின் அன்பை மதித்து போட்டியின் நடுவே பிறந்தநாளை கொண்டாடிய வில்லியசனின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Kane Williamson - The most loved cricketer in the world celebrating his 29th birthday in an unusual way. #Champion #SLvNZ @BLACKCAPS @ThePapareSports pic.twitter.com/ZWaQbqyXPn
— Damith Weerasinghe (@Damith1994) August 8, 2019
