'நாலே ஓவர்தான்.. 7 விக்கெட் க்ளோஸ்.. டி20-ல இதெல்லாம் சான்ஸே இல்ல!.. 'மரண மாஸ் சாதனை'.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Aug 08, 2019 05:27 PM

டி20 போட்டியில் நினைத்துப் பார்க்கவே முடியாத வரலாற்று சாதனையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கோலின் ஆக்கர்மேன் படைத்துள்ளார்.

Colin Ackermann takes 7-18 to claim for Leicestershire T20

இங்கிலாந்தில் நடந்து வரும் டி20 பிளாஸ்ட் தொடரில்  மற்றும் வார்விக்‌ஷைர் அணிகள் மோதிக்கொண்டன. லீசெஸ்டரில் நடந்த இந்த போட்டியில் கவுண்டி அணிக்காக விளையாண்டு வரும், கோலின் ஆக்கர்மேனின் அதிரடியான ஆட்டம் வரலாறு காணாத அளவில் பேசப்பட்டு வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லீசெஸ்டெர்ஷைர் 20வது ஓவரின் முடிவில் 189 ரன்கள் எடுத்ததை அடுத்து, எதிரணியான வார்விக்‌ஷைர் அணியின் பேட்டிங் ஆர்டர் மொத்தத்தையும், லீசெஸ்டர்ஷைர் அணியின் கேப்டனான கோலின் ஆக்கர்மேன் திட்டமிட்டு தவிடுபொடியாக்கினார்.

எனினும் ஆஃப் ஸ்பின்னிங்கில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே கொடுத்த, ஆக்கர்மேன் 7 விக்கெட்டுகளை 24 பந்துகளில் மளமளவென வீழ்த்தி, டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள்தான் இதுவரை வீழ்த்தப்பட்டிருக்கிறது என்கிற கடினமான சாதனையை முறியடித்துள்ளார்.

இதனையடுத்து எதிரணியான வார்விக்‌ஷைர் அணி 134 ரன்களுக்கு சுருண்டது. லீசெஸ்டெர்ஷைர் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் ஆக்கர்மேன் ஆடிய அந்த அதிரடி ஆட்டம் இணையத்தி வீடியோவாக வலம் வருகிறது.

Tags : #ENG #CRICKET #WICKET #T20