‘வடிவேலு பாணியில் கலாய்த்த ஆஸ்திரேலிய வீரர்.’.. ‘சிரிப்பில் ஆழ்ந்த இங்கிலாந்து ரசிகர்கள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 05, 2019 11:13 AM

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தன்னிடம் ஒன்றும் இல்லை என்பதை காட்ட, கால் சட்டை பையை எடுத்துக்காட்டுவார். அதேபோல், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தன்னுடைய கால் சட்டை பையை எடுத்துக்காட்டிய விதம் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

David Warner empties pockets to win Edgbaston crowd

இங்கிலாந்து சென்றுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்துவருகிறது. ஆஸ்திரேலிய அணியில், பந்தை சேதப்படுத்திய புகாரில் தண்டனைக்குள்ளாகி, பின்னர் அணிக்கு திரும்பிய டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கேமரான் பேன்கிராஃப்ட் ஆகிய மூவரும் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் எல்லைக்கோடு அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது இங்கிலாந்து ரசிகர்கள் வார்னர் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தை நினைவுபடுத்தி கோஷமெழுப்பினர். மேலும் மணல் தன்மை உடைய சொரசொரப்பான தாளை டேவிட் வார்னர் வைத்திருப்பதாக அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்த டேவிட் வார்னர், தம்மிடம் ஒன்றும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, கால் சட்டை பைகளை வெளியில் எடுத்து காண்பித்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் வாய் விட்டுச் சிரித்தனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #AUSTRALIAN-BALL-TAMPERING-CONTROVERSY-2018 #ASHES #DAVIDWARNER #AUSTRALIA