‘கேப்டனா மாத்துனா, எல்லாம் சரியா வரும்’... ‘பயிற்சியாளர் பரிந்துரைத்ததாக தகவல்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 05, 2019 03:20 PM

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவை மாற்ற வேண்டும் என்று, அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Pakistan Team Coach Mickey Arthur Recommends Sarfaraz Ahmed

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர், கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து, அந்நாட்டின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில், அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்று முடிவிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதையடுத்து அணியின் செயல்பாடுகள் குறித்து, அந்த கிரிக்கெட் அணியின் மேலாளர் வாசிம் கானுடன் விவாதிக்கப்பட்டது.

அப்போது பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், ‘கேப்டன் சர்ஃபிராஸ் அகமதுவை மாற்றிவிட்டு, சுழல் பந்துவீச்சாளர் சதாப்கானை குறுகிய ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பாபர் அசாமை நியமிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக’ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு இன்னும் இரண்டு வருடங்கள் பாகிஸ்தான் அணியில், தான் இருந்தால் அணியை இன்னும் சிறப்பான நிலைக்கு கொண்டுவர முடியும் என்று தலைமை  பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #PAKISTAN #TEAM #CRICKET #SARFARAZAHMED