பேஸ்புக் 'லைவ் ஸ்ட்ரீமில்'.. மெட்ரோ ஊழியரின் விபரீத செயல்.. பதற வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 12, 2019 05:06 PM

டெல்லி மெட்ரோ ஊழியர் ஒருவர் பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் வீடியோவின் முன்னால், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DMRC staff commits suicide in Facebook live stream

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தததும் டெல்லி மெட்ரோ ரயிலில் பணிபுரியும் நபர் ஒருவர், தனது பேஸ்புக்கின் கவர்  போட்டோவில் I Quit என்று எழுதப்பட்ட வாசகம் அடங்கிய புகைப்படத்தை வைத்துள்ளார். இதனைப் பார்த்த பலரும் அவரது பேஸ்புக்கை விசிட் செய்துள்ளனர்.

அப்போதுதான் அவர் பேஸ்புக்கின் லைவ் ஸ்ட்ரீம் வீடியோவில், தற்கொலை செய்வதாக அவர் சொல்லிக்கொண்டிருந்தது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. டெல்லி மெட்ரோ யுனிஃபார்மை அணிந்தபடி, கேமராவைப் பார்த்தபடி தனது ஐடி கார்டுக்கு 2 முறை முத்தங்கள் தந்துள்ளார் அவர்.

அதன் பின்னர், மஞ்சள் பிளாஸ்டிக் ஒயரை கையில் எடுத்துக்கொண்டு தன் கழுத்தை, தானே இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் பதறிப் போ, அந்த நபருக்கு போன் செய்துள்ளனர். சிலர் பேஸ்புக் மெசஞ்ஜர் மூலமாகவும் கால் செய்துள்ளனர்.

இதனையடுத்து யாரோ, போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், அந்த மெட்ரோ ஊழியர் தங்கியிருந்த வாடகை அறைக்குச் சென்று பார்த்தபோது இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகில் அவர், பயன்படுத்திவந்த செல்போன் இருந்துள்ளது. அதில்தான் அவர் பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் மூலம் போன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எவ்வித கடிதமும் அவர் எழுதிவைக்காததால், தற்கொலைக்கான காரணம் தெரியாததால், என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags : #RAILWAY #DELHI #METRO