'அதுக்குள்ள அடுத்த சதமா?.. விளாசும் வீரர்'.. ஆனால், ‘கோலியவிட பெஸ்ட்டா?’.. சர்ச்சை ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Aug 05, 2019 11:00 AM

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் ஐபிஎல் போட்டிகளில் பெரிய அளவில் ஃபார்மில் இல்லை என்றாலும், உலகக் கோப்பையில் தனது அசரவைக்கும் பங்களிப்பை கொடுத்தார்.

Smith is Better Than Kohli, Says Former Aussie captain

அதுமட்டுமல்லாமல் தற்போது ஆஷஸ் தொடரில், தன்னையே மீட்டெடுத்து வருகிறார் ஸ்மித்.  பிர்மிங்ஹாமில் உள்ள எட்பக்ஸன் மைதானத்தில் நடந்துவரும், ஆஷஸ் தொடரின் முதல் இன்னிங்ஸில் 122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை, 284 ரன்களை நோக்கி அழைத்துச் சென்றார்.

இந்த ஆட்டத்தில்தான், தனது வெற்றிகரமான 24-வது டெஸ்ட் சதத்தை 118 இன்னிங்ஸில் அடித்து, இரண்டாம் இடத்தில் இருந்த கோலியை பின்னுக்குத் தள்ளி முந்தினார். அதன் பின், ஆஷஸ் தொடரின் 2வது இன்னிங்ஸில், 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் இந்த ஆட்டத்தில் தனது 25-வது டெஸ்ட் சதத்தை விளாசினார். இதுபற்றி பேசியுள்ள ஸ்மித், தனது கனவாக இருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் ஒவ்வொரு நாளின் விடியலும் கிறிஸ்துமஸ் போல் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

24வது சதத்தை அடித்த, அதே தொடரின் அதே ஆட்டத்தின் அடுத்த இன்னிங்ஸில், அதாவது 119வது இன்னிங்ஸில் தனது 25வது சதத்தை எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடிக்கும் வீரராக ஸ்மித் புகழ்பெற்றுள்ளார்.  இதனிடையே கோலிக்கு ஏற்ற போட்டியாளர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் ஒருபுறம் கருத்துக்களை பதிவிட, கோலியை விட ஸ்மித் சிறந்தவர்தான் என முன்னாள் வீரர் ராபர்ட் கீ ட்வீட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags : #VIRATKOHLI #ASHES2019 #STEVESMITH #AUSTRALIA #AUSVENG #TEST #CRICKET