எங்க ஊருல ஒரு 'மேட்ச்' கூட நடத்தக்கூடாது... கடும் 'எதிர்ப்பு' தெரிவிக்கும் அரசு... என்ன பண்றது 'சிக்கலில்' பிரபல அணி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் வருகின்ற 29-ம் தேதி தொடங்கும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பெங்களூரில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என அந்த மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த கடிதத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம். இல்லையென்றால் போட்டிகளை தள்ளி வையுங்கள் என கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறதாம். மேலும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அந்த மாநில அரசு மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசு இதை அவ்வளவு எளிதில் நிராகரிக்க முடியாது. இதனால் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்கு தற்போது கடும் சிக்கல் எழுந்துள்ளது. பெங்களூரின் சின்னச்சாமி மைதானம் அந்த அணியின் ஹோம் கிரவுண்டாக திகழ்வதால் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்றும் நிலா ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு தோனி தலைமையிலான சென்னை அணிக்கு இதேபோல சிக்கல் எழுந்து போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
