'மருத்துவக் கழிவுகளுடன் சீனக் கப்பல்...!' சென்னை நோக்கி வருகிறதா..? ஒருவேளை கப்பலை அனுமதித்தால்... அதிகாரிகள் தீவிர ஆலோசனை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவக் கழிவுகளுடன் சீனக் கப்பல் ஒன்று சென்னை துறைமுகம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ள நிலையில், அந்த கப்பலை அனுமதிக்கலாமா? வேண்டாமா என்பது குறித்து சென்னை துறைமுக உயர்மட்ட அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கப்பலை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்ததாகவும் தெரிகிறது. எனினும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.சீனாவில் பரவியுள்ள கொரானா வைரசால் உலக நாடுகளே பீதியில் உள்ளன. இந்நிலையில், அங்கிருந்து மருத்துவ கழிவுகளுடன் கப்பல் ஒன்று சென்னைக்கு வந்திருப்பது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : #CORONOVIRUS #SHIP
