‘மந்திரம் வீண் போகல.. ஜெயிச்சுக் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் கிருஷ்ணா’.. நிதா அம்பானியின் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 14, 2019 08:55 PM
ஐபிஎல் டி20 போட்டிகளின் பரபரப்பான இறுதி ஆட்டம் கடந்த 12-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. பொல்லார்ட் இதில் அதிகபட்சமாக 41 ரன்கள் ஸ்கோர் செய்தார்.
பின்னர் 150 என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 1 ரன் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியுற்றது. 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய மும்பை அணி, கோப்பையுடன் மும்பை விமான நிலையத்துக்குச் சென்றபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, கோப்பையைக் காட்சிப்படுத்தியலடி, மும்பையின் முக்கிய வீதிகளில் 6 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்தி கொண்டாடப்பட்டது.
🙏🏻🏆 #OneFamily pic.twitter.com/1Dq0K09U2S
— Mumbai Indians (@mipaltan) May 14, 2019
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நிதா அம்பானி, தங்களது அணி வென்ற ஐபிஎல் கோப்பையை பவ்வியமாக எடுத்துவந்து கிருஷ்ணர் சிலை முன்பாக வைத்துவிட்டு, கிருஷ்ணரை சமஸ்கிருத மந்திரப் பாடல்களைப் பாடி துதித்து தன் வெற்றியை ஆராதித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக சென்னை-மும்பை அணிகள் மோதிக்கொண்ட இறுதி மேட்சின் இறுதித் தருணத்தில் நிதா அம்பானி, மந்திரம் போட்டு வேண்டிக்கொண்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Hello Nita Ambani can you please accompany India on the world cup tour!!!
Just to do that!!
#IPLFinal pic.twitter.com/yDmWU3FdRW
— shilpi tewari (@shilpitewari) May 12, 2019
