சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய பெண்ணுக்கு கிடைத்த முக்கிய பதவி..! வெளியான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 14, 2019 07:19 PM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த ரெஃப்ரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 51 வயதான ஜி.எஸ். லட்சுமி என்பவர் கடந்த 2008-2009 ஆம் ஆண்டு உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய லட்சுமி,‘நான் நீண்ட கால கிரிக்கெட் வீராங்கனையாகவும், மேட்ச் ரெஃப்ரியாகவும் இருந்துள்ளேன். தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தில் பெண் ரெஃப்ரியாக தேர்வானது மிகுந்த மகிழ்ச்சியாகவும், கௌவரவமாகவும் கருதுகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
Tags : #ICC #GS LAKSHMI #TEAMINDIA #BCCI