‘நல்லா விளையாடுறாரு’.. ‘அப்றம் ஏன் சரியா வாய்ப்பு கிடைக்கலனே தெரியல’.. பிரபல வீரர் குறித்து சொன்ன புது பேட்டிங் கோச்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 18, 2019 11:17 AM
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவுக்கு அதிகமாக வாய்ப்பு கிடைக்காதது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பையில் அடுத்தடுத்து சதங்களை விளாசி அதிரடி காட்டினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடி வரும் ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் சரியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. ரோஹித் ஷர்மா இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் குறித்து பேசிய இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் , ‘ரோஹித் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஏன் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது புரியாத ஒன்றாக இருக்கிறது. ஒருநாள் போட்டியைப் போலவே டெஸ்ட் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அசத்துவார் என நம்புகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள வீரர்கள் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தால் லிமிடெட் ஓவர் போட்டிகளை போல டெஸ்ட் போட்டியிலும் அசத்துவார்’ என தெரிவித்துள்ளார்.
