‘அவங்க 2 பேரால தான்’.. ‘இவரு இந்த நிலமைல இருக்காரு’.. ‘விராட் கோலியை சீண்டியுள்ள பிரபல வீரர்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 20, 2019 03:42 PM

இந்திய முன்னாள் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Kohli only does well because of MSDhoni and Rohit says Gambhir

அகமதாபாத் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் கம்பீர், “விராட் கோலி உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டாலும் அவர் தன்னை சிறந்த கேப்டனாக நிரூபிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. கோலி தற்போது ஒரு நாள் தொடரில் சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்றால் அவர் அணியில் ரோஹித் ஷர்மா இருக்கிறார். மேலும் நீண்ட காலமாக அவருடன் தோனி இருந்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் ஷர்மா மும்பை அணிக்காக சாதித்துள்ளது, தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சாதித்துள்ளது ஆகியவற்றுடன் ஆர்சிபி அணியை ஒப்பிட்டால் அதை அனைவரும் தெரிந்துகொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத கோலியை ஆர்சிபி அணி இன்னும் கேப்டனாக வைத்துள்ளதற்கு அவர் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் எனக் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #TEAMINDIA #VIRATKOHLI #ROHITSHARMA #GAUTAMGAMBHIR #CAPTAIN #IPL #CSK #MUMBAIINDIANS #RCB #MSDHONI