அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார்..? சென்னை அணி உரிமையாளரின் அதிரடி பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 16, 2019 10:22 AM

அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கேப்டனாக தோனியே நீடிப்பார் என சிஎஸ்கே அணியின் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

MS Dhoni will continue as csk captain, Says N Srinivasan

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி டிஎன்பிஎல் போட்டிகள் கோவையில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து தோனியின் ஓய்வு குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருப்பார் என தெரிவித்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸிடம் கோப்பையை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #MSDHONI #IPL #TEAMINDIA #CRICKET #IPL2020 #NSRINIVASAN #CHENNAISUPERKINGS