‘12 வருஷமா விளையாடாம இருந்தாரு’.. திடீர் ஓய்வை அறிவித்த இந்திய ஆல்ரவுண்டர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 19, 2019 07:43 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தினேஷ் மோங்கியா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த 2001 -ம் ஆண்டி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தினேஷ் மோங்கியா 57 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 38 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
2003 -ல் நடந்த உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. இதில் கும்ப்ளேவுக்கு பதிலாக ஆல்ரவுண்டரான தினேஷ் மோங்கியாவை கேப்டன் கங்குலி களமிறக்கினார். இதனை அடுத்து பிசிசிஐயால் அங்கீகரிக்கபடாத ஐசிஎல் அணியில் விளையாடியதால் தினேஷ் மோங்கியாவால் இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் போனது. 42 வயதான தினேஷ் மோங்கியா கடந்த ஆண்டு பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 12 வருடங்களாக விளையாடாமல் இருந்த தினேஷ் மோங்கியா தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
