'பயமில்லாம' வெளையாடுறது வேற..'கவனக்குறைவா' வெளையாடுறது வேற!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Sep 18, 2019 08:57 PM
இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தும் அதனைத்தக்க வைத்துக்கொள்ள,இளம்வீரர் ரிஷப் பண்ட் தவறுவதாக மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்திய அணியில் தோனிக்கு அடுத்து அவரின் இடத்தை நிரப்பும் வகையில் ரிஷப் பண்டை உருவாக்கிட இந்திய அணி முயற்சித்து வருகிறது.ஆனால் வாய்ப்புகள் கிடைத்தும் அதனை பண்ட் சிறப்பாக பயன்படுத்தவில்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தொடங்கி தலைமைப்பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வரை சொல்லி விட்டனர்.
இந்த வரிசையில் புதிதாக தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் இணைந்துள்ளார்.இதுகுறித்து விக்ரம் ரத்தோர் கூறுகையில்,''ரிஷப் பண்ட் போன்ற இளம்வீரர்கள் பயமின்றி ஆடுவதற்கும்,கவனக்குறைவாக ஆடுவதற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு வீரரும் பயமின்றி விளையாட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.சரியான திட்டமிடலுடன் தெளிவாக ஆட வேண்டும்.அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.
