பஞ்சாப் அணியில் இருந்து விலகும் அஸ்வின்..? அடுத்த ஐபிஎல்-ல் எந்த அணியில் விளையாடுகிறார்..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 04, 2019 01:22 PM
அடுத்து வருடத்துக்கான ஐபிஎல் தொடரில் மற்றொரு அணியின் சார்பில் அஸ்வின் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கடந்த இரண்டு வருடங்களாக ஐபில் தொடரில் பஞ்சாப் அணியை கேப்டனாக இருந்து வழி நடத்தினார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறமாலேயே வெளியேறியது. இதனால் அடுத்த வருடம் புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர்களுடன் பஞ்சாப் அணி விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் சார்பாக அஸ்வின் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக டெல்லி அணியின் சார்பில் அஸ்வினிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக சைமன் கேடிச்சும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
