‘15 வருஷமா யாராலும் செய்ய முடியாத சாதனை’.. முதல் போட்டியிலேயே முறியடித்த ரஷித்கான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 05, 2019 05:28 PM
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. இதன் எதிரொளியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நீக்கப்பட்டு முன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இளம் வீரர் ரஷித்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து ரஷித்கான் தலைமையில், வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் விளையாடுகிறது. இதன் மூலம் இளம் வயதில் டெஸ்ட் போட்டியில் கேப்டனான வீரர் என்ற சாதனையை ரஷித்கான் (20 வயது, 350 நாட்கள்) படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜிம்பாப்வே வீரர் தைபு (20வயது, 358 நாட்கள்) 2004 -ம் ஆண்டு அந்த அணியின் கேப்டன் ஆனது குறிப்பிடத்தக்கது. 15 வருடம் கழித்து இந்த சாதனையை ரஷித்கான் முறியடித்துள்ளார். இந்நிலையில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.