‘ஜஸ்ட் மிஸ்’ ‘அது மட்டும் நடந்திருந்தா..!’.. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 03, 2019 10:48 AM

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை தவறவிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Kemar Roach misses hattrick as Ajinkya Rahane survives

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஜமைக்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று கோப்பைகளையும் வென்று இந்திய அணி அசத்தியது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கிமார் ரோச் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். இப்போட்டியில் கே.எல்.ராகுல், விராட் கோலி என இருவரையும் அடுத்தடுத்து கிமார் ரோச் அவுட்டாக்கினார். அடுத்த பந்தை இந்திய அணியின் துணைக்கேப்டன் ரஹானே எதிர்கொண்டார். ஆனால் பந்து பேட்டில் பட்டு ஸ்டம்புக்கு மிகஅருகில் சென்றது. இதனால் கிமோர் ரோச் நூலிழையில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இது அந்நாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

via Gfycat

Tags : #BCCI #VIRATKOHLI #TEAMINDIA #INDVWI #TEST #HATTRICK #KEMARROACH #RAHANE #CRICKET