‘சிங்கிள்ஸ் கொஞ்சம் நோட் பண்ணிக்கோங்க’.. ‘ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Aug 27, 2019 07:23 PM

இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Man marries both his girlfriends at the same time video goes viral

இந்தோனேஷியாவில் திருமணம் செய்யும் ஆண், பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் என சட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளைஞர் தனது இரு தோழிகளை கடந்த 17 -ம் தேதி ஏர்டராப் என்னும் இடத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்டால் மற்றொரு பெண் வருத்தப்படுவார் எனக் கருதி இருபெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவில் ஒரு ஆண் சட்டப்படி 4 பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.

Tags : #GIRLFRIENDS #MARRIES #MAN #VIRALVIDEO #INDONESIA