‘தல’ தோனியோட பெரிய சாதனை.. ஒரே கேட்ச்சில் அசால்டாக முறியடித்த ரிஷப் பந்த்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 02, 2019 02:14 PM
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோனியின் சாதனையை இளம் வீரர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 468 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் விக்கெட் கீப்பிங்கில் தோனியின் சாதனையை இளம் வீரர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். இப்போட்டியில் இஷாந்த் ஷர்மா வீசிய ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வொய்ட்டின் விக்கெட்டை ரிஷப் பந்த் கேட்ச் பிடித்து கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50 விக்கெட்டை அவர் பதிவு செய்தார். இந்திய அணிக்காக குறைந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி 50 விக்கெட்டுகள் எடுத்த தோனியின் (15 டெஸ்ட்) சாதனையை ரிஷப் பந்த் (11 டெஸ்ட்) முறியடித்துள்ளார். சர்வதேச அளவில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டின் (11 டெஸ்ட்) சாதனையை சமன் செய்துள்ளார்.
