‘உணர்ச்சிவசத்தில் இளைஞர் செய்த செயல்’.. ‘கூலாக நடந்துகொண்ட ராகுல் காந்தி’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 28, 2019 09:31 PM

கேரளாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு இளைஞர் ஒருவர் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Rahul Gandhi gets a surprise kiss from a man in Wayanad

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியான வயநாட்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி காரில் ஊர்வலமாக சென்றார். காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த அவர் தொண்டர்களுக்கு கை குலுக்கியவாரே சென்றார்.

அப்போது தொண்டர் ஒருவர் கை குலுக்கிவிட்டு திடீரென ராகுல் காந்திக்கு முத்தமிட்டார். இதனால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு முத்தமிட்டதை ராகுல் காந்தி இயல்பாக எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #CONGRESS #RAHULGANDHI #KERALA #WAYANAD #KISS #VIRALVIDEO