‘டி20 போட்டியில் 2 தடவை 6 விக்கெட் எடுத்த வீரர்’.. கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 28, 2019 11:25 PM

இலங்கை கிரிக்கெட் வீரர் அஜந்தா மெண்டீஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sri Lanka Spinner Ajantha Mendis announces retirement

சுழற்பந்து வீச்சாளரான அஜந்தா மெண்டீஸ் இலங்கை அணிக்காக 39 டி20 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளும், 87 ஒருநாள் போட்டியில் விளையாடி 152  விக்கெட்டுகளும் மற்றும் 19 டெஸ்ட் போட்டியில் விளையாடி 70 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு தடவை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதேபோல் ஒருநாள் போட்டியில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த 2008 -ம் நடந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். இந்நிலையில் கடந்த 2015 -ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த மெண்டீஸ் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Tags : #AJANTHAMENDIS #RETIREMENT #SRILANKA #CRICKET #SPINNER