‘அவரோட டிப்ஸ் ரொம்ப நேரம் தப்பாதான் போயிருக்கு’.. ‘ஆனா இத அவர்கிட்ட சொல்ல முடியாது’..‘தல’ பற்றி கூறிய பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 14, 2019 12:32 PM
இந்திய அணியின் முக்கிய வீரரும், விக்கெட் கீப்பருமான தோனி குறித்து குல்தீப் யாதவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
![Dhoni goes wrong with his tips a lot of times, says Kuldeep Yadav Dhoni goes wrong with his tips a lot of times, says Kuldeep Yadav](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/dhoni-goes-wrong-with-his-tips-a-lot-of-times-says-kuldeep-yadav.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி பல்வேறு சாதனைக்ளை நிகழ்த்தியுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான உலகக்கோப்பை பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.
அதேபோல் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால் இந்த வருடம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 1 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை கோப்பையை நழுவிட்டது. ஆனால் பல இக்கட்டான நேரங்களில் களத்தில் இருக்கும் வீரர்களுக்கு தோனி சில அறிவுரைகளை வழங்குவார். அவரின் இந்த அறிவுரை அணியை பல முறை வெற்றியடையை வைத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளாரான குல்தீப் யாதவ் களத்தில் தோனி கூறும் அறிவுரை குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,‘பல நேரங்களில் தோனி கூறும் டிப்ஸ் தவறாகத்தான் முடிந்துள்ளது. ஆனால் இதை அவரிடம் தெரிவிக்க முடியாது. அவர் அதிகமாக பேசமாட்டார். தேவையான நேரங்களில் வந்து சில டிப்ஸ் கொடுப்பார்’ என அவர் தோனி குறித்து கூறியுள்ளார். மேலும், இதை அவர் நகைச்சுவையாக கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)