“இதோ உங்கள பாக்கத்தான் வாரேன்”!.. ‘செல்ஃபி தான எடுக்கனும் வாங்க எடுக்கலாம்’!.. தொண்டர்களை காண பிரியங்கா செய்த செயல்! வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 14, 2019 05:24 PM

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக தடுப்புகளை தாண்டி குதித்து சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

priyanka jumps over the barricade to meet his supporters in MP

மக்களைவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தனது சகோதரருமான ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும்  பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில், இவரை காண ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். ஆனால் தொண்டர்களுக்கு இடையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தன்னை நோக்கி ஆரவாரம் செய்த தொண்டர்களை அருகில் சென்று பார்ப்பதற்காக தடுப்புகளை தாண்டி குதித்து மறுபக்கம் சென்று தனக்கு ஆரவாரம் செய்த தொண்டர்களை பார்த்தார். மேலும், அவர்களின் விருப்பத்திற்கேற்ப செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த காலத்தில் இந்திரா காந்தி இவ்வாறு செய்த செயலை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி வருகின்றனர்.