‘வெஸ்ட் இண்டீஸ் தொடர்’... ‘இந்திய அணி அறிவிப்பு!’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 21, 2019 02:46 PM

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. தோனி இல்லாத நிலையில், புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஷிகர் தவான் அணியில் இடம் பெற்றுள்ளார்.

India tour of West Indies, BCCI Announced just now

உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதியில் தோற்று வெளியேறிய நிலையில், அணியில் பல்வேறு சல சலப்புகள் நிலவி வந்தது. மறுபுறம் தோனி ஓய்வு பெற வேண்டும் என பல கருத்துக்கள் பரவி வந்த நிலையில், தோனியே தனக்கு 2 மாதங்கள் ஓய்வு வேண்டும், துணை ராணுவப்படைப் பிரிவில் பணியாற்றச் செல்வதாக பிசிசிஐ-யிடம்கடிதம் கொடுத்துள்ளார். இதனால் அவர் அணியில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீல் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. போட்டி வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கி, செப்டபர் 3-ம் தேதி வரை நடக்க உள்ளது.

3 விதமான போட்டிகளிலும், விராட் கோலியே கேப்டனாக தொடர உள்ளார். விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணியில்: கோலி (கேப்டன்), ரஹானே (துணைக் கேப்டன்), மாயங்க் அகர்வால், கே.எல் ராகுல், புஜாரா, விஹாரி, ரோகித் சர்மா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணியில்: கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல்,  கலீல் அகமது, நவ்தீப் சைனி,  கேதர் ஜாதவ், சமி, புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளனர்.

டி.20 அணியில்: கோலி(கேப்டன்), ரோகித் சர்மா(துணைக் கேப்டன்), தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே,  ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),  கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளனர்.

Tags : #TEAMINDIA