உலகக்கோப்பைக்குபின் ஐசிசி வெளியிட்ட முக்கிய பட்டியல்..! முதல் இடம் பிடித்து அசத்திய 2 இந்திய வீரர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 17, 2019 11:06 AM
உலகக்கோப்பைக்கு பின் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் மற்றும் அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் 12 -வது சீசன் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனை அடுத்து நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் மற்றும் அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அணிகளை பொறுத்தவரை உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து (மதிப்பீடு 125) முதல் இடத்திலும், இந்தியா (மதிப்பீடு 122) இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்து (மதிப்பீடு 112 ) மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மேலும் ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (மதிப்பீடு 886) தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா (மதிப்பீடு 881) இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல் பந்துவீச்சாளர்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (809) முதல் இடத்தில் நீடித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் (மதிப்பீடு 740) உள்ளார்.
