‘காயத்தால் இளம் வீரருக்கு வந்த சோதனை’.. வரயிருக்கும் தொடரில் விளையாடுவது சந்தேகம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 16, 2019 06:03 PM

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ப்ரீத்வி ஷாவிற்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

Don’t know how much time will it take to get fit, says Prithvi Shaw

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியில் இளம் வீரர் ப்ரீத்வி ஷா இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற டி20 லீக் போட்டியில் விளையாடும் போது ப்ரீத்வி ஷாவின் இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ப்ரீத்வி ஷா விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ப்ரீத்வி ஷா செய்தியாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததாவது, ‘காயம் குணமாக இன்னும் எத்தனை நாள் ஆகும் என தெரியவில்லை. நான் 100 சதவிகித உடற்தகுதியை இன்னும் அடையவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால் காயம் எப்போது குணமடையும் என சரியாக சொல்லமுடியவில்லை. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிக்குமுன் காயம் குணமடைய தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #BCCI #TEAMINDIA #PRITHVISHAW #INJURY