‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ முற்றுப்புள்ளி வைத்துள்ள அணி நிர்வாகம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 18, 2019 04:17 PM

உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

Kohli Rohit rift talks absolute nonsense team management

உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இனி டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாகத் தொடர்வார், மற்ற குறைந்த ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் கேப்டனாக  நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.

மேலும் கேப்டன் கோலி அணி வீரர்களுடன் கலந்தாலோசிக்காமல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்ந்து தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், இதனால் அதிருப்தியடைந்த வீரர்கள் ரோஹித் தலைமையில் தனி அணியாகச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்திய அணி நிர்வாகம் தற்போது இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோலி - ரோஹித் கருத்து வேறுபாடு குறித்து விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து அணி நிர்வாகிகள் தரப்பிலிருந்து, “அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது, பிரச்சனை உருவாகியுள்ளது என முற்றிலும் உண்மையில்லாத செய்தி பரப்பப்பட்டுள்ளது. இது தேவையில்லாதது. உலகக் கோப்பை முடிந்துவிட்டதால் தற்போது வேறு ஒரு புதிய தலைப்புச் செய்தி தேவை. அதற்காக இவர்கள் எப்படியெல்லாம் தங்களுக்கு வேண்டியபடி எல்லாவற்றையும் திரித்துக் கூறுகிறார்கள் என்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #CONTROVERSY #MSDHONI #VIRATKOHLI #ROHITSHARMA #RAVISHASTRI