வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான வீரர்கள் தேர்வு திடீர் ஒத்திவைப்பு..! காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 19, 2019 10:48 AM
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு தொடர்பான கூட்டம் இன்று தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கூட்டம் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் போது காயம் அடைந்த வீரர்களின் உடற்தகுதி அறிக்கை வரும் சனிக்கிழமைதான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வீரர்களின் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விராட் கோலி மற்றும் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் அணியில் தோனியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
