‘வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடர்’.. முன்னணி வீரர்கள் விளையாடுவது சந்தேகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 20, 2019 09:59 PM
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத இருக்கிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உலகக்கோப்பையில் விளையாடிய வீரர்களின் காயம் தொடர்பாக அறிக்கை வெளியாகததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோருக்கு ஒய்வு அளிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அணிக்கு திரும்புவார்கள் என கூறப்படுகிறது.
