'இது லிஸ்ட்லயே இல்லயே?'.. வயசானப்புறம் கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பாங்க?.. தத்ரூப படங்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 17, 2019 01:09 PM

ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஒவ்வொரு விஷயம் ட்ரெண்டிங்கில் இருப்பதை காண முடிகிறது.

cricket players looks like aged goes trending in twitter

ஐஸ் பக்கெட் சேலஞ்சில் தொடங்கி, கிகி சேலஞ்ச், பாட்டில் சேலஞ்ச், 10 வருட சேலஞ்ச் என பலவிதமான சேலஞ்ச்களும் நேசமணி, சாரி ட்விட்டர் போன்ற சமகால ட்ரெண்ட் கதைகளும் இணையதளத்தை அவ்வப்போது அலங்கரிப்பது உண்டு. எங்கேயோ ஒரு புள்ளியில் முளைத்த இந்த விஷயங்கள் திடீரென எழும்பி ஹேஷ்டேகுகளாகவும் மீம்ஸ்களாகவும் விரிவடைகின்றன.

அப்படித்தான் இப்போது கிரிக்கெட் சீசன் முடிந்ததும் கிரிக்கெட் பற்றிய பேச்சுகள் முற்றாக ஓய்வுபெற்று பிசிசிஐக்கு யார் அடுத்த பயிற்சியாளர், தோனி எப்போது ஓய்வு பெறுகிறார் என்று போய்க்கொண்டிருக்கும் நிலையில், கேன் வில்லியம்ஸன், கிறிஸ் கெய்ல் போன்ற வெளிநாட்டு வீரர்கள் உட்பட இந்திய வீரர்களுள் சிலர் வயதானால் எந்தத் தோற்றத்தில் இருப்பார்கள் என்கிற கற்பனை படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காக வலம் வருகின்றன.

குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, தோனி, புவனேஷ்வர், தினேஷ் கார்த்திக், ரவீந்தர் ஜடேஜா உள்ளிட்ட பல வீரர்களின் வயதான தோற்றங்களை தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர். இந்த படங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

Tags : #MSDHONI #VIRATKOHLI #TEAMINDIA #AGEDPLAYERS #TRENDINGNOW