இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்? ..வெளியான புது தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 18, 2019 11:03 AM
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்பிருக்கும் சில முன்னாள் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர், பௌலிங் பயிற்சியாளராக பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களது பதவிக்காலம் உலகக்கோப்பைத் தொடருடன் முடிவடைந்து விட்டது. வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இவர்களது பதிவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளாதாக தெரிகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 30 -ம் தேதிக்கு முன்னர் கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் ஜெயவர்த்தனே, ஸ்டீபன் பிளம்மிங், டாம் மூடி, கேரி கிறிஸ்டன் ஆகியோர் தலைமை பயிற்சியாளராக விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் ஜெயவர்த்தனே அல்லது டாம் மூடி பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதில் ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அதனால் இந்திய முன்னணி வீரர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதால் அவர் பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளது. நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளம்மிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இந்திய அணி வீரர்களுடன் நல்ல தொடர்பு உள்ளதால் இருவரில் ஒருவருக்கு பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளது. அதேபோல் தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டன், இவர் பயிற்சியாளராக இருந்தபோது தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. அதனால் இவர் மீண்டும் பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
