‘இதுல கோலி சொல்றதுக்கெல்லாம் எதுவும் இல்ல..’ பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 18, 2019 01:34 PM

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை கபில் தேவ் தலைமையிலான குழு தேர்வு செய்யும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Virat Kohli won’t have a say in choosing new coach

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரி (தலைமைப் பயிற்சியாளர்), சஞ்சய் பங்கர் (பேட்டிங் பயிற்சியாளர்), பரத் அருண் (பௌலிங் பயிற்சியாளர்) மற்றும் ஸ்ரீதர் (பீல்டிங் பயிற்சியாளர்) ஆகியோரின் பதவிக்காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இவர்களுடைய பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த முறை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே குறித்துப் புகார் கூறியிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரியைப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்க ஆதரவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த முறை அவர் பயிற்சியாளர் தேர்வில் சொல்ல எதுவும் இல்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்துப் குறித்துப் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், “இந்த முறை புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் விராட் கோலி சொல்ல எதுவுமே இல்லை. பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் கபில் தேவ் இருக்கிறார். அவர் கோலி சொல்வதைக் கேட்க மாட்டார்” எனக் கூறியுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #VIRATKOHLI #ANILKUMBLE #RAVISHASTRI #NEWCOACH #COACHSELECTION #BCCI