கேப்டன் விராட் கோலியா? ரோஹித் ஷர்மாவா? .. சர்ச்சை குறித்து வெளியான தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 19, 2019 01:24 PM
இந்திய கிரிக்கெட் அணியில் வெடித்த கேப்டன் சர்ச்சை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இதனால் இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் விழுந்தன. அதில் முன்னணி வீரர் தோனியை மிடில் ஆர்டரில் இறக்கிவிடாமல், கடைசி கட்டத்தில் இறக்கிவிட்டது தவறான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாகவும், ரோஹித் ஷர்மா ஒருநாள் மற்றும் டி20ம் போட்டிகளுக்கு கேப்டனாகவும் செயல்படபோவதாக புதிய சர்ச்சை வெடித்தது. முன்னதாக 2007 -ம் ஆண்டு முதல் 2008 -ம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு அனில் கும்ளே கேப்டானகவும் செயல்பட்டனர். அதேபோல் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் 2017 -ம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டானகவும் இருந்தனர். இந்த முறை இந்திய அணிக்கு ஒத்துவராததால் 3 வகையான போட்டிகளுக்கும் ஒரே வீரர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் உலகக்கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியில் கேப்டன் குறித்த சர்ச்சை வெடித்தது. இதனால் மூன்றுவகையான போட்டிகளுக்கும் விராட் கோலியே கேப்டனாக தொடர்வார் என கூறப்படுகிறது. மேலும் இன்று நடக்க இருந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய கூட்டத்தில் வீரர்கள் தேர்வு, கேப்டன்ஷிப் போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.