உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு.. ‘தனது முடிவைத் தெரிவித்துள்ள விராட் கோலி..’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 17, 2019 07:53 PM

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Virat Kohli set to travel to West Indies for T20Is ODIs and Tests

அடுத்து இந்தியா விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படும் எனக் கடந்த மாதம் தகவல் வெளியானது. கோலி டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடலாம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு விராட் கோலி, அடுத்து நடைபெற இருக்கும் டெஸ்ட் மட்டுமல்லாது, ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் தான் பங்கேற்க விரும்புவதாக  அணித் தேர்வர்களிடம் தெரிவித்துள்ளார் எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு ஏற்பட்ட பின்னடைவை கோலி இந்தத் தொடரிலிருந்தே சரி செய்ய விரும்புவதாகவும், அதுவே இந்த முடிவுக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.

இந்திய அணி பங்கேற்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. மேலும் இந்தத் தொடருக்கான இந்திய அணி ஜூலை 19ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #TEAMINDIA #WI