‘ஐபிஎல் முடிஞ்சிருச்சு, இனி அடுத்த டார்கெட் இதுதான்’.. புதிய அணியில் விளையாட ஒப்பந்தமான சிஎஸ்கே வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 15, 2019 02:24 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 தொடர் ஒன்றில் விளையாட உள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் டி20 தொடர் 12 -வது சீசனின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி 4 -வது முறையையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதில் 1 ரன்னில் சென்னை அணி மும்பையிடம் கோப்பையை நழுவவிட்டது.
ஆனாலும் சென்னை அணி வீரரான வாட்சன் இறுதிப்போட்டியில் காலில் ஏற்பட்ட காயத்துடன் கடைசி வரை விளையாடினார். இந்த புகைப்படத்தை சென்னை அணியின் மற்றொரு வீரரான ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வாட்சனுக்கு பெரும் அனுதாபத்தை உண்டாகியது.
மேலும் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் இந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்து அசத்தினார். இவர் தற்போது இங்கிலாந்து நடைபெற உள்ள விட்டாலிட்டி டி20 பிளாஸ்ட் என்னும் தொடரில் சர்ரே அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் ஃபின்ஞ்க்கு அடுத்தபடியாக இதில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர் இம்ரான் தாஹீர் என்பது குறிப்படத்தக்கது. மேலும் உலகக்கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இம்ரான் தாஹீரும் இடம்பெற்றுள்ளார்.
