‘டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்’... 'பிசிசிஐ அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Sep 24, 2019 06:24 PM

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார்.

Jasprit Bumrah Ruled Out Of Test Series vs South Africa

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டி20, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரில்,  1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து அடுத்ததாக, தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தப் போட்டி, வரும் அக்டோபர் 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் அபார பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு, முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. வழக்கமான பரிசோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Tags : #BUMRAH #JASPRIT