‘வந்தாச்சு 150 ரூபாய் நாணயம்’.. காந்தி ஜெயந்தி விழாவில் வெளியிட்ட பிரதமர் மோடி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 03, 2019 10:57 AM

மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்த நாளை முன்னிட்டு 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

PM Modi releases Rs 150 coins, on Mahatma Gandhi birth anniversary

காந்தி ஜெயந்தி தினமான நேற்று குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் ஓரத்தில் உள்ள காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது காந்தியின் நினைவாக 150 ரூபாய் நாணயத்தை மோடி வெளியிட்டார்.

மேலும்  ‘காந்தியின் 150 -வது பிறந்த நாளில் நான் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். தூய்மை இந்தியா என்ற காந்தியின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது. திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை இந்தியா நிறுத்திவிட்டது என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்’ என சபர்மதி ஆசிர்மத்தில் உள்ள குறிப்பேட்டில் மோடி எழுதினார். இதேபோல் கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை மோடி வெளியிட்டார்.

Tags : #NARENDRAMODI #PM #GANDHIAT150 #150RSCOIN