‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 25, 2019 01:19 PM

தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

MS Dhoni was not made in a day, Says Yuvraj Singh

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இந்த தொடரிலும் தோனி தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் அவரது ஓய்வு குறித்து பல்வேறு தகவல் வெளியாகின. ஆனால் இவை அனைத்தும் ‘வதந்தி’ என தோனியின் மனைவி சாக்‌ஷி ஒற்றை வரியில் பதிலளித்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் தோனியின் நண்பருமான யுவராஜ் சிங், தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார்.

இந்தியா ஆன் ட்ராக் ஏற்பாடு செய்த ‘தி ஸ்போர்ட்ஸ் மூவ்மென்ட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய யுவராஜ் சிங், ‘என்னைப் பொறுத்தவரை ஓய்வு குறித்து தோனிதான் முடிவெடுக்க வேண்டும். அவர் சிறந்த வீரர் மட்டுமில்லை, இந்திய அணியின் கேப்டானாகவும் இருந்துள்ளார். எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் இன்னும் விளையாட வேண்டும் என முடிவெடுத்தால், அதை நாம் மதிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

மேலும் ரிஷப் பந்த்தை தோனியுடன் ஒப்பிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான பங்களிப்பைத் தந்தவர் தோனி. அதனால் தோனியுடன் ரிஷப் பந்த்தை ஒப்பிடுவது நியாயம் இல்லாத ஒன்று. தோனி என்பவர் ஒருநாளில் உருவான வீரர் இல்லை. அவர் சிறந்த வீரராக மாற நிறைய ஆண்டுகள் தேவைபட்டன. அதேபோல் அவருக்கு இணையான வீரர் கண்டுபிடிக்க சில காலம் தேவைப்படும். தோனியின் இடத்தைப் பிடிக்க வேண்டுமானல் ரிஷப் பந்துக்கும் நிறைய காலம் தேவைப்படும். பயிற்சியாளர்கள், கேப்டன் விராட் கோலி போன்றோர்தான் அவருக்கு தேவையான வலிமையைக் கொடுத்து வேலை வாங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Tags : #MSDHONI #YUVRAJSINGH #RISHABHPANT #BCCI #VIRATKOHLI #TEAMINDIA #RETIREMENT