‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா’.. ‘தல’ தோனியை சீண்டிய சர்ரே கிரிக்கெட்..! ட்விட்டரில் பொழந்து கட்டிய ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 30, 2019 10:34 AM

வேகமாக ஸ்டம்பிங் செய்வது தொடர்பாக வீடியோ வெளியிட்ட சர்ரே கிரிக்கெட்டுக்கு தோனியின் ரசிகர்கள் அவர் ஸ்டம்பிங் செய்த வீடியோவை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.

Fans troll surrey cricket for comparing MS Dhoni lightening

இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிளப் நடத்தும் டி20 ப்ளாஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டி ஒன்றில் இங்கிலாந்து விக்கெட் கிப்பர் பேட்ஸ்மேன் பென் ஃபோக்ஸ் வேகமாக ஸ்டம்பிங் செய்து விக்கெட் ஒன்றை எடுத்தார். இந்த வீடியோவை சர்ரே கிரிக்கெட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'வேகமாக ஸ்டம்பிங் செய்யும் வீரரின் பெயரை கூறுங்கள்’ என பதிவிட்டது.

விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை கைப்பற்றுவதில் கை தேர்ந்தவர் தோனி. பல இக்கட்டான சூழலில் திடீரென ஸ்டம்பிங் செய்து ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். இந்நிலையில் சர்ரே கிரிக்கெட் பதிவிட்ட ட்வீட்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தோனியின் ரசிகர் அவர் ஸ்டம்பிங் செய்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Tags : #MSDHONI #TEAMINDIA #STUMPING #SURREY #FANS #BENFOAKES #T20BLAST2019